Skip to main content

உலகத்தமிழ் - 37




































 

Comments

  1. உலகத்தமிழ் 103 கண்டு மகிழ்ந்தேன். எண்ணற்ற புதிய தகவல்களை அறிந்து இன்புற்றேன்.

    1. மாத்யூ அர்னால்டு கவிதை:

    மாத்யூ அர்னால்டுவின் சேக்சுபியர் கவிதையின் மொழியாக்கம் கண்டேன். மொழி பெயர்ப்பில் சில மாற்றங்களைக் கூற விரும்புகிறேன்.

    Others abide our question. Thou art free.
    We ask and ask—Thou smilest

    எமது கேள்வியை
    மற்றவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.
    நீங்கள் விலகியிருக்கிறீர்கள்.
    நாங்கள் அடிக்கடி கேட்டுக்கொண்டே
    இருக்கிறோம்.
    நீங்கள் புன்னகைக்கிறீர்கள்;

    என்று செல்லும் கவிதையின் இறுதி மிக அருமையானது. மேன்மையானது; கவியழகின் உச்சமானது. அதன் எனது மொழிபெயர்ப்பு, கீழே வழங்கியுள்ளேன்.

    All pains the immortal spirit must endure,
    All weakness which impairs, all griefs which bow,
    Find their sole speech in that victorious brow.

    இந்த அழிவற்ற ஆன்மா தாங்கியுள்ள அனைத்து வலிகளும், குன்றிடச் செய்த அத்தனை பலவீனங்களும், தலைகுனிவு செய்த அத்தனை துன்பங்களும், அந்த வெற்றிக் குன்றில் தங்கள் தனித்த குரல்களை ஒலிக்கின்றன.

    2. உரைவேந்தர் கட்டுரை

    உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் கட்டுரையில் சான்றோர்களின் சிறப்பியல்புகளைக் கூறி இறுதியில் அறிவுறுத்துவது இன்றளவிலும் பொருந்தக்கூடிய ஒன்று.

    மறைமலையடிகளின் மன மேம்பாட்டுக் கட்டுரை நிலையற்று அலையும் இக்காலத்தவரின் மனத்தை வலுவூட்ட வல்லது. மறைமலையடிகளின் ‘தொலையுணர்விட உணர்வுகள்’ தமிழ் நூல் படிக்க வேண்டிய ஒன்று.

    3. ‘பதிகங்களைப் படியுங்கள்’ கட்டுரை

    ‘பதிகங்களைப் படியுங்கள்’ கட்டுரையில் சுந்தரர் பதிகத்தின் விளக்கம் நன்று. ஆயினும் சில பிழைகள்…..

    இரண்டாவது பாராவில் ‘இறைவனைத் தோப்புனாகவே’ என்பது “இறைவனைத் தோழனாக …” என்றிருக்க வேண்டும்.
    நான்காவது பாராவில் திருப்புகழ் பதிகம் என்று வருவதைத் ‘தேவாரப் பதிகம்’ என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    பதிகத்தில் பிழைகள் உள்ளன.

    “மறை ஒளி” என்பது “மறை ஓதி” என்று இருத்தல் வேண்டும்.
    செலுவார் பெண்ணை என்பது செழுவார் பெண்ணை என்று இருத்தல் வேண்டும். அடிகா என்பது அழகா என்று இருத்தல் வேண்டும்.

    இரண்டாம் பத்தியில் “முழு என்ற சொல்லுக்கு” என்பது “மழு என்ற சொல்லுக்கு” என்று இருத்தல் வேண்டும்.

    4. இலக்கணம் இலக்கியம் ஆகிய சொற்கள் கட்டுரை:

    அணம் என்ற விளக்கங்கள் நன்று. எனது கருத்துக்களையும் எடுத்துரைக்க விழைகிறேன். அணம் என்ற சொல்லுக்கு அந்தணம் என்று சொல்லில் வரும் அணம் என்ற சொல் இன்னும் விளக்கம் தரும்.
    அந்தம் +அணம் =அந்தணம். முற்றிலுமாய் ஒரு அப்பழுக்கற்ற ஒழுக்க நெறி. சுருக்கமாகச் சொல்வதெனில் நெறி, ஒழுக்கம்.

    அதுபோல் இலக்கணம் என்பது மொழியின் இலக்கில் கடைப்பிடிக்கப்படும் ஒரு தளர்வற்ற நெறி. வரையறுக்கப்பட்ட நெறி. நெறிப்படுத்திச் செய்யவேண்டியவற்றில் எல்லாம் அணம் என்ற சொல் சேர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

    அணம் என்றால் நெறி முறைப்படுத்த பட்ட ஒன்று. வரையறுக்கப்பட்ட ஒன்று. உதாரணம் வங்கி கட்டணம்.

    அவ்வாறு வருபவையே, ஒத்தி (ஒற்றி) எடுக்கும் ஒத்தணம், பூரணம் போன்ற சொற்கள். பூரணம் என்பது முற்றிலும் முழுமை பெற்றது.

    தூக்கணம் - ஒழுங்குறச் செய்து தொங்குவது. தொங்கும் ஒரு கலத்தைத் தூக்கு என்றே சொல்வதுண்டு. ஒழுங்குற்ற கூட்டில் தொங்கி வாழ்வது தூக்கணங்குருவி.

    பூசணம் செய் என்பது முறையாகப் பூசு. ஒழுங்குறப்பூசு, ஒழுங்குறப் பூசப்பட்டது என்பதாக வருவதே.

    பொத்து + அணம் = பொத்தணம். ஒழுங்குற பொத்தி வைக்கப்பட்டது. பிற்பாடு அதுவே பொட்டணம் ஆனது.

    சப்பணம் =சப்பை + அணம். நன்கு தட்டையாக அழுந்தி அமர்ந்து உட்காருதல்.

    பந்தணம் =பந்தம் +அணம். நெறியோடு கட்டுதல். (தெனாலி ராமன் கதையில் திலகாட்ட மகிட பந்தணம் என்று கேள்விப்பட்டதுண்டு இல்லையா)

    கொட்டணம் =கொட்டு +அணம். கொட்டு என்றால் கீழே தாழும்படி அடித்தல் என்ற பொருள் உண்டு. கொட்டணம் என்றால் நெல் குற்றுதல் என்று கூறுவார். குற்றுதல், கொட்டுதல் நெல் குற்றுவதே!

    குற்று என்றால் கீழே விழும்படித் தாக்குதல் என்பதும் உண்டு. குற்றணம் என்று இருந்திருக்க வேண்டும். அரிசி உடைந்து நொறுங்காதபடி நெறிப்படி நெல்லைக் குற்றுதல்.

    சிக்கணம் என்பது முற்றிலும் வழுவழுப்பானது என்று பொருள். முற்றிலும் நெருக்கி பிடித்திருத்தல். சிக்கு என்றால் பிடிபட்டுப் பற்றியிருத்தல் எனலாம்.

    இறுதியில் குறிப்பிட்டதுபோல் இல்லாமல் மேல்வாய்க்கு அணல் (அணம் அல்ல) என்றே கூறப்படுவது நோக்கத்தக்கது.

    5. அறிவியலில் தமிழ் வழிக்கல்வி கட்டுரை.

    மருத்துவர் தாரா நடராசனின் குழந்தை நலம் விவரங்கள் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

    6. பாபு குலாப் ராய்: எழுத்தாளர் குலாப் ராயின் பன்முகத் தன்மை மிக நன்று. புதிய விவரங்களை அறிந்து கொள்ள முடிந்தது.

    உலகத்தமிழ் 103 மனத்தில் நிற்கிறது.

    செம்மொழிக்கவிஞர்
    மெய்ஞானி பிரபாகரபாபு
    சங்க இலக்கிய ஆய்வறிஞர்
    உரையாசிரியர்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உலகத்தமிழ் - 39

 

உலகத்தமிழ் - மலர் 1 நாள் : 11.12.2019